ஒரே நாளில் ரூ.40,000 கோடி அள்ளிய 'பேஸ்புக்' நிறுவனர்..!

சமூக வலைதளமான, 'பேஸ்புக்' நிறுவனத்தின் பங்கு மதிப்பு, ஒரே நாளில்,  13 சதவீதம் உயர்ந்ததால், அதன் நிறுவனரான மார்க் ஸுக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு, 40 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்து, 3.18 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

இதன் மூலம், உலக பணக்காரர்கள் பட்டியலில், மார்க் ஸுக்கர்பர்க், ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் விற்பனை, சென்ற டிசம்பருடன் முடிந்த நான்காவது காலாண்டில், 52 சதவீதம் உயர்ந்து, நிகர வருவாய், இரு மடங்கு அதிகரித்து உள்ளது.

இந்த தகவல் வெளியானதை அடுத்து, அமெரிக்காவின், 'நாஸ்டாக்' பங்குச் சந்தையில், பேஸ்புக் நிறுவனப் பங்கின் விலை, ஒரே நாளில், 13 சதவீதம் உயர்ந்தது.

உலக கோடிஸ்வரர்கள்பில்கேட்ஸ் 5.21 லட்சம் கோடி ரூபாய்
அமான்சியோ ஆர்டெகா 4.70 லட்சம் கோடி ரூபாய்
வாரன் பப்பெட் 3.95 லட்சம் கோடி ரூபாய்
ஜெப் பெசோஸ் 3.47 லட்சம் கோடி ரூபாய்
கார்லஸ் ஸ்லிம் 3.20 லட்சம் கோடி ரூபாய்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -