சலீம் றமீஸ்-
அட்டாளைச்செனை பிரதேசத்தில் அட்டாளைச்சேனை, ஒலுவில, பாலமுனை, திராய்க்கேணி, தீகவாப்பி, ஆலிம் நகர், ஹிரு கிராமம், ஆலங்குளம், சம்புநகர், சின்னப்பாலமுனை, உதுமாபுறம் போன்ற கிராமங்களில் வாழும் மக்களின் நன்மை கருதி அட்டாளைச்சேனை உப மின்சார நிலையத்தினை தரம் உயர்த்த கிழக்கு மாகாண சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
என கிழக்கு மாகாண சபையின் அமர்வு பிரதித்தவிசாளர் பிரசன்ன இந்திர குமார் தலைமையில் நடைபெற்ற போது இலங்கை மின்சார சபையின் அட்டாளைச்சேனை மின்சார உப நிலையத்தை மின்சார அத்தியட்சகர் காரியாலயமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற தனிநபர் பிரேரணை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரினால் சமர்ப்பிக்கப்பட்ட போது இப்பிரேரணையை வழி மொழிந்து உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக நான் கடமை புரிந்த வேளையில் மிகுந்த பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டு இப்பிரதேச மக்களின் நன்மைக கருதி அட்டாளைச்சேனையில் இலங்கை மின்சார சபையின் உப மின்சார நிலையம் 1995ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்த உப மின்சார நிலயத்தை தரம் உயர்த்துவதற்கு மத்திய அரசாங்கத்தின் மின்சார அமைச்சராக அன்று பதவியில் இருந்த திரு.சம்பிக்க ரணவக்க அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன். மின்சார உப-நிலையத்தை தரம் உயர்த்துவது குறித்து புதிய நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு மின்சார பொறியியலாளர் காரியாலய பிரதேசத்தில் சுமார் 45,000 மின் பாவனையாளர்கள் இருக்க வேண்டும் எனவும் அன்று தெரிவித்தார்.
பதிய மின்சார அமைச்சரிடம் தொடர்பு கொண்டு இலங்கை மின்சார சபையின் அட்டாளைச்சேனை உப மின்சார நிலயத்தினை தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம், கிழக்கிலங்கை அரபுக்கல்லூரி, தேசிய கல்விக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, தேசிய மட்டத்தில் இயங்கக்கூடிய தாபனங்கள் பல அமைந்துள்ளதால் விரைவாக அட்டாளைச்சேனை உப மின்சார நிலையத்தினை தரம் உயர்த்த கிழக்கு மாகாண சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
