மடவளை மதீனா தேசிய பாடசாலையின் மைதானத்தினை அபிவிருத்தி - அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை!

ஹாசிப் யாஸீன்-
டவளை மதீனா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தினை அபிவிருத்திசெய்வதற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இப்பாடசாலையின் விளையாட்டு மைதானத்தினை பார்வையிடுவதற்காக திங்கட்கிழமை (07)விஜயம் செய்த பிரதி அமைச்சர், மைதானத்தின் குறைபாடுகளை நேரில் பார்வையிட்டதுடன்மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இதனைத் தொடர்;ந்து இம்மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பிரதிஅமைச்சர் ஹரீஸூக்கும், பாடசாலை அதிபர் தலைமையிலான குழுவினருக்குமிடையில்பாடசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது மைதான அபிவிருத்திக்கு அடுத்த வருட ஜனவரியில் நிதி ஒதுக்கீடுகளைமேற்கொண்டு அபிவிருத்தி செய்துதருவதாக பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்உறுதியளித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -