கே.சி.எம்.அஸ்ஹர்-
தபாலகங்கள் இன்று நாட்டில் ஒரு முக்கிய வகிபங்கை வகிக்கின்றது . கடிதப்பரிமாற்றம், தந்திச் சேவை தபால் அடையாள அட்டை விநியோகம், முத்திரை விநியோகம் , காசுக்கட்டளை அனுப்புதல், தொலைபேசி சேவை, பார்சல் அனுப்புச்சேவை, சேமிப்புக் கணக்குச் சேவை ,பில் கட்டண சேவை ( நீர், மின் கட்டணம்), தொலைபேசிச்சேவை, நீதி மன்ற தண்டப்பணம் (வாகன) ,மின்னஞ்சல் வசதி, பணப்பறிமாற்ற வசதி , முதியோர் உபகார நிதி போன்ற பல சேவை களை தபாலகங்கள் செய்து வருகின்றன.
இலங்கையின் முதலாவது தபாலகம் 1895ல் கொழும்பில் அமைக்கப்பட்டது. முதலாவது போஸ்ட் மாஸ்டர் எம்ஆர்.ஏ.கென்னடி (எயர்போஸ் ஒபீஸர்) போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் எம்.ஈ. ப்ளெட்டர்மென். 1972ல் மும்மொழி முத்திரை வெளியிடப்பட்டது.
1921ல் சிலபத்துறை உபதபால் அலுவலகம் இலங்கையில் முதன்முதலாக அமைக்கப்பட்ட உபதபாலகம் ஆகும். இதன் தேவை முத்துக்குளித்தல் , அரிப்புக்கோட்டை போன்ற விடயங்களால் முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கலாம். இதற்குரிய அரச கட்டிடங்கள் பற்றிய தகவல் அறியமுடியாதுள்ளது.
நாம் அறிந்த பிற்காலப்பகுதியில் தனியார் வீடுகளில் வாடகை அடிப்படையில் சிலாபத்துறை உபதபாலகம் இயங்கியதை அறிய முடிகின்றது. (திரு .ராயப்பு போஸ்ட் மாஸ்டரின் வீடு)
முத்துக்குளித்தலில் கொடிகட்டிப்பறந்த சிலாபத்துறை நகரிற்கு முந்நாள் ஜனாதிபதிகளான ஜெ.ஆர். ஜெயவர்த்தன ஆர்.பிரேமதாச போன்றோர் வருகை தந்துள்ளனர். 1990வரை சிலாபத்துறை தபாலகத்திற்குச் சொந்தமான அரச கட்டிடம் இருக்கவில்லை. மீள் குடியேற்றத்தின் பின்னர் கூட இதற்கு தனியான தபாலக கட்டிடம் கிடைக்கவில்லை.
முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.அஸ்வர் அவர்கள் மகிந்த ஆட்சிக்காலத்தில் சிலாபத்துறைக்கு 2014ல் சகல வசதியும் கொண்ட தபாலகம் அமைக்கப்படும் என வாக்களித்துள்ளார்.
இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், றஊப் ஹக்கீம் போன்றோர் தபால்தறை அமைச்சர்களாக இருந்தும் இவ்விடயம் கருத்தில் கொள்ளப்படவில்லை.
தற்போது இத்தபாலகம் சவேரியார் புரத்தில் உள்ள கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இயங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.
சிலாபத்துறைக்கு நவீன வசதிகள் கொண்ட தபாலகம் ஒன்றைப் பெற்றுக் கொடுக்க , 'வடமாகாண அபிவிருத்திக் குழுத்தலைவரும், அமைச்சரும் ஆகிய ரிசாத் பதியுதீன்' அவர்கள் தபால் முஸ்லிம் கலாசார அமைச்சர் அப்துல் ஹலீம் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வைப்பெற்றுத்தர வேண்டும். ஏன முசலிப்பிரதேச மக்கள் கோரிக்கைவிடுகின்றனர்.

