றியாஸ் ஆதம் -
நிதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட நிதிகள் இம்முறை மாவட்ட ரீதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவே இதனை துறைசார்ந்த அதிகாரிகள் சரியாக பயன்படுத்தவேண்டுமென கிழக்குமாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.
கிழக்குமாகான சபையின் 2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
கிழக்கு மாகாண ஆட்சிக்குட்பட்ட மூன்று மாவட்டங்களிலும் ஆற்றப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்காக 2016ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்;தினூடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் இம்மாகாண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்க வேண்டுமென இந்த சபையில் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த ஆண்டு மாகாண சபைக்கான நிதிகள் மத்திய அரசின் ஒரு அமைச்சுக்கு வழங்ப்பட்டு அந்த அமைச்சூடாக மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கின்ற ஒரு நிலைமை உருவாக்கப்பட்டது இதனை அனைத்து மாகாண முதலமைச்சர்களும் எதிர்த்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர் எமது ஜனாதிபதி அவர்கள் தலையிட்டு மீண்டும் நேரடியாக நிதிகளை மாகாண சபைகளுக்கே வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையானது மத்திய அரசு மாகாணத்தினை அடிமைப்படுத்த மேற்கொண்ட முயற்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
மத்திய அரசின் கீழுள்ள நிதி ஆணைக்குழு நாற்பது வீதமான நிதிகளையே சகல மாகாணங்களுக்கும் கொடுத்திருக்கின்றது கடந்த காலங்களில் நிதி ஆணைக்குழுவானது நேரடியாக துறைசார்ந்த விடயங்களுக்காக நிதிகளை ஒதுக்கீடு செய்ததது ஆனால் இப்போது மாவட்ட ரீதியாக நிதிகள் ஒதக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவே முதலமைச்சர், அமைச்சர்கள், துறைசார்ந்த அதிகாரிகள் நிதிகளை சரியாக கையாளவேண்டும்.
கடந்தகாலங்களில் நாங்கள் இந்த சபையிலே அமைச்சராகவிருந்த போது பல அபிவிருத்திப் பணிகளை சிறப்பாக செய்தோம் அப்போது இந்த மாகாணத்தினுடைய ஆளுநராக இருந்தவர் முன்னால் இராணுவ அதிகாரியாக இருந்தவர் அவரிடத்திலே பல சவால்களை எதிர்நோக்கினாலும் அவரோடு இணைந்து எமது சமூகத்தின் தேவைகளை வென்றெடுத்தோம்.
ஆனால் இப்போது இருக்கின்ற ஆளுநர் சிவில் நிருவாகத்திலே அனுபவம்வாய்ந்த ஒரு அதிகாரி அவரிடத்திலே நாங்கள் எந்தவேளையிலும் பிரச்சிணைகளை முன்வைக்க முடியும் கடந்த காலங்களில் கட்டடத்திறப்பு விழாக்களில் எங்களை புறக்கனித்திருந்தார்கள் குறிப்பாக கிழக்குமாகாண முதலமைச்சரே இதனை செய்தார் இதுதொடர்பாக இப்போதைய ஆளுநரிடம் முறையிட்டேன் இச்சம்பவத்தினை கவனத்திற்கொண்ட அவர் இவ்வாறான அநியாயமான விடயங்களுக்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் எனக்கூறினார் எனவே மாகாணத்தினை ஆளுகின்றவர்கள் நீதியாகவும் நேர்மையாகவும் பணியாற்றவேண்டும்.
அடுத்து எமது மாகாண பேரவைச் செயலகமானது இந்த சபையினுடைய ஒலிபெருக்கிகளை இதுவரை சரியாகச் செய்யவில்லை இதற்காக நிதிகள் ஒதுக்கப்பட்டும் இன்னும் சீர்செய்யப்படவில்லை இதுதொடர்பில் கடந்த சபை அமர்வுகளில் பிரச்சிணைகளை சுட்டிக்காட்டி சரிசெய்வதற்கு
அனுமதி வழங்கினோம் ஆனால் அவைகள் கவனத்திற்கொள்ளப்படவில்லை இந்த உயர்சபையிலே இப்படியான குறைபாடுகள் இருப்பதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் இந்த சபையிலே நாங்கள் பல விடயங்களை பேசுகின்றோம்.
குறிப்பாக எங்களுடைய அரசியல் இருப்பு மற்றும் இம்மாகாணத்திலே வாழுகின்ற மக்களுடைய பிரச்சினைகளை துனிவுடன் பேசுகின்றோம் பேசப்படுகின்ற விடயங்கள் யாவும் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படுகின்றன இதனை எமது எதிர்கால சந்ததியினர் தேடிப்படிக்கின்ற சந்தர்ப்பங்கள் இருக்குன்றது ஆகவே இவ்வாறான விடயங்கள் கவனத்திற்கொள்ளப்பட்டு சீர்செய்யப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.