நேற்று மாலை கண்டி பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற தேசிய மீலாத் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்றைய உலகில் பல நாடுகளில் பல பெயர்களில் பயங்கரவாத நடவடிக்கைகள் தலை தூக்கி உள்ளது. உலகில் பார்த்தால் இன்று பங்கரவாதத்தினால் கொல்லப்படும் மக்களில் கூடியவர்கள் முஸ்லிம்கள்.
இதற்கு காரணம் என்ன வென்று ஆராய வேண்டி உள்ளது. அன்மையில் நான் பாப்பரசரை சந்தித் போது அவர் என்னிடம் வினவினார் உலகில் பயங்கரவாதத்தை உருவாக்குபவர்கள் யார் என்று.
நான் பதில் எதுவும் கூறாமல் இருந்த போது அவர் கூறினார் உலகில் பயங்கரவாத்தை உருவாக்கியவர்கள் போராடும் பயங்கரவாதி
கள் அல்ல ஆயுதம் உற்பத்தி செய்பவர்கள் என்று. இதிலிருந்து உலகு எங்கே செல்கின் றது என்பது தெளிவாகிறது.
பயங்கரவாகிகளுக்கும் அதற்கு எதிராக போறாடுபவர்களுக்கும் ஆயுதத்தை தயாரிப்பது ஒரே இடத்தில் தான் என்பது தெளிவாகின்றது.
முஹம்மது நபி அவர்கள் இவ்வுலகிற்கு ஒரு சிறந்த முன்மாதிறியை காட்டியுள்ளார். மதீனா உடன்படிக்கை மூலம் உலகிற்கு சாந்தி சமாதானம் போன்றவற்றை கற்பித்து தந்தார் என்றும் அதிபர் இங்கு தெரிவித்தார்.