அபிவிருத்திக்கான திட்டங்களை கிழக்கில் சாத்தியப்படுத்த உள்ளேன் -ஹுசைன் மெளலானா.

முர்சித்-
மாணவர்களது அறிவு மற்றும் ஆளுமை விருத்திக்கான நல்ல திட்டங்ளை நடைமுறைப்படுத்த நான் தயார்" என்று மிலேனியம் கல்வி இஸ்தாபனத்தின் தலைவர் எஸ் ஹுசைன் மெளலானா தெரிவித்தார்.

இறக்காமம் 10 ஏ கிராம பாசடாலைக்கு அல் ஹாஜ் முஸ்தபா மசூர் அவர்களது வேண்டுகோளுக்கு இனங்க வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணப் பொதிகளை வழங்கிவைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் 

"சுயதொழில், சமூக நல்லிணக்கம் மற்றும் கல்வி அபிவிருத்திக்கான திட்டங்களை கிழக்கில் சாத்தியப்படுத்த உள்ளேன்" எனவும் தெரிவித்தார்.

இறக்காமம் 10 ஏ கிராமப் பாடசாலை அதிபர் ஹாருதீன் பேசுகையில் 

"கிராம மாணவர்களின் தேவையை அறிந்து, கொழும்பில் இருந்து நேரடியாகவே மாணவர்களுக்கான உதவிகளை கொண்டுவந்து வழங்கிய மெளலானா அவர்ளுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு, இந்நிகழ்வை சாத்தியப்படுத்த உதவிய அல்ஹாஜ் முஸ்தபா மசூர் அவர்களுக்கும் நன்றிகள்" எனத்தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -