ஹிருனிக்காவினால் துமிந்தவை கடத்த முடியாதா..?

மது தந்தையின் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை ஏன் கடத்திச் செல்ல முடியாது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரபல பாடகர் மதுமாதவ அரவிந்த இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

குடும்பப் பிரச்சினை ஒன்றுக்காக தாம் ஒரு சட்டத்தரணி என்ற அடிப்படையில் ஹிருனிக்கா ஒருவரை கடத்திச் சென்று விசாரணை செய்திருக்கிறார்.

இந்தநிலையில் தமது தந்தையாரின் கொலை தொடர்பில் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வரும் துமிந்த சில்வாவை ஏன் அவரால் கடத்திச் சென்று தமது சொந்த நீதிமன்றத்தில் விசாரணை செய்ய முடியாது என்று அரவிந்த கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே சட்டத்துக்கு புறம்பாக செயற்பட்டுள்ள ஹிருனிக்கா கைதுசெய்யப்பவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் பாடகர் அரவிந்த இந்தக்கோரிக்கையை விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -