பாலமுனையில் கவிதை நூல் வெளியீட்டு விழாவும் கவிஞர்கள் கௌரவிப்பும்...!


பி.முஹாஜிரீன்
பாலமுனை பஸ்மில் ஏ கபூர் எழுதிய ‘இரண்டாம் உயிர்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவும் கவிஞர்கள் கௌரவிப்பும் நிகழ்வு நேற்று (26) சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

டொக்டர் எஸ்.எம். றிபாஸ்தீன் தலைமையில் பாலமுனை இப்னு சீனா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

நூலின் கருத்துரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ் நிகழ்த்தினார். நூலின் அறிமுக உரையை கவிஞர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீனும் நூல் நயவுரையை கவிஞர் பா Vந்தல் பாலமுனை பாறூக்கும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் உயரதிகாரிகள், இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், சமூக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள்; எனப் பலர் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -