எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி பிரதேசத்திற்கு நகர திட்டமில் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் விஜயம் மேற்காண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சவளக்கடை, மத்தியமுகாம், சாளம்பைக்கேணி ஆகிய மத்திய குழுக்களின் கூட்டமும், பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்கள் நேற்று நடைபெற்றது.
சவளக்கடை பிரதேசத்திற்கான மத்திய குழுக் கூட்டமும், பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் சவளக்கடை மத்திய குழுத் தலைவர் ஏ.அஸீஸ் தலைமையில் 5ஆம் கொளனி ஸபூரியா ஜூம்மா பள்ளிவாசாலில் நடைபெற்றது.
சாளம்பைக்கேணி பிரதேசத்திற்கான மத்திய குழுக் கூட்டமும், பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் சாளம்பைக்கேணி மத்திய குழுத் தலைவர் எம்.எச்.மஹ்ரூப் தலைமையில் அஸ்-சிறாஜ் மகா வித்தியாலத்தில் நடைபெற்றது.
மத்தியமுகாம் பிரதேசத்திற்கான மத்திய குழுக் கூட்டமும், பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் மத்தியமுகாம் மத்திய குழுத் தலைவர் ஏ.நளீம் தலைமையில் மத்தியமுகாம் ஜூம்மா பள்ளிவாலில் நடைபெற்றது.
இதன்போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹிர், ஆரீப் சம்சுத்தீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரகுமத் மன்சூர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்ச பீட செயலாளர் மன்சூர் ஏ.காதர், நாவிதன்வெளி பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் ஏ.சீ.எம்.நஸார், மத்திய குழுக்களின் பிரதிநிதிகள், கிளைக் குழுக்களின் என பலரும் கலந்துகொண்டனர்.




