செக்ஸ் அன்ட் லவ்’ இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக கொழும்பு மாநகரசபை நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கொழும்பு மாநகரசபையின் அனுமதியின்றியே இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதன்காரணமாக கொழும்பு மாநகரசபைக்கு 20.9 மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மாநகரசபை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த நிகழ்வுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் வெளியிட்ட நிலையிலேயே மாநகரசபையினர் வழக்கு தொடர்பில் முனைப்புக்காட்டுக்கின்றனர்.
ஏற்கனவே வழக்கு தொடரப்படுவதை தடுப்பதற்காக முக்கியஸ்தர் ஒருவரின் மகன் முயற்சிகளை மேற்கொண்டதாக மாநகரசபையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியை ‘Live Events’ என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. Live Events நிறுவனத்தின் உரிமையாளர்கள் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் ஆவர்.
இதேவேளை ஏற்பாட்டாளர்கள் வருமான நட்டத்தை ஈடுசெய்வதில் தோல்வி கண்டால் நிகழ்வை நடத்த அனுமதி வழங்கிய சீஆர் அன்ட் எப்சி மைதான தலைவருக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று மாநகர சபையினர் அறிவித்துள்ளனர்.
5000 ரூபா முதல் 35000 ரூபா வரையில் இந்தநிகழ்வுக்கான அனுமதி சீட்டுக்கள் உத்தியோகபூர்வமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதனைதவிர 7689 அனுமதிச்சீட்டுக்கள் களவாக அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகரசபை நிர்வாகம் அறிவித்துள்ளது.
