சவுதி அரேபியா மற்றும் கட்டார் நாடுகளுக்குச் சென்றவர்களுக்கு இன்று நேர்ந்த நிலை..!

தொழில் நிமித்தம் இலங்கையில் இருந்து சவுதி அரேபியா மற்றும் கட்டார் நாடுகளுக்குச் சென்றவர்கள் இன்று காலை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் அந்நாடுகளில் பல துன்பங்களை அனுபவித்து வந்ததை தொடர்ந்தே அவர்கள் அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை விமானச் சேவைக்கு சொந்தமான UL-266 என்ற விமானத்தில் சவுதி அரேபியாவில் இருந்து 44 பேரும், குவைட் விமானச்சேவைக்கு சொந்தமான ku-361 என்ற விமானத்தில் கட்டாருக்கு சென்ற சிலரும் வந்தடைந்தனர்.

அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, பொத்துவில் மற்றும் பொலனறுவை இடங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

நாட்டை வந்தடைந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புத் திணைக்களம் பணம் கொடுத்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -