இலங்கை உயர் தொழிநுட்பவியல் நிறுவனத்தில் (SLIATE) தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா (HNDIT) கற்கை நெறியை நிறைவு செய்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அணைத்து மாணவர்களையும் ஆசிரிய உதவியாளர்களாக இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் மேற்கொண்டு வருகின்றார்.
தகவல் தொழில் நுட்ப டிப்ளோமா நிறைவூ செய்த மாணவர்களால் வடக்கு, ஊவா ஆகிய மாகாணங்களில் தகவல் தொழில்நுட்ப டிப்ளோமாவை நிறைவு செய்த மாணவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வருவதை முதலமைச்சருடைய கவணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்தே மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
