வேலைநிறுத்தம் காரணமாக சாதாரணதர பரீட்சார்த்திகள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு நாளை நடைபெறவிருக்கும் பரீட்சைகளை மற்றொரு நாளில் நடத்துமாறு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கை பரீட்சைகள் ஆணையாளருக்கு எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின்பொது செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாம் பரீட்சைகள் ஆணையளரை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் எம்மால் தொடர்புகொள்ள முடியாமல் போனது.
மேலும் தொடர்பில் பிரதமர் தலமையில் இன்று கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்தார்.
