இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் பேஸ்புக் பக்கத்தை பல லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். அவரது பேஸ்புக் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வார இறுதியில் சானியா மிர்சாவின் பேஸ்புக் பக்கத்தை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.
பிரபல ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா 1.52 கோடி பேஸ்புக் ரசிகர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதற்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் சானியா மிர்சா. செரீனா வில்லியம்சுக்கு 40 லட்சம் பேஸ்புக் ரசிகர்களும், செர்பிய வீராங்கனையான அனா இவானோவிச்சுக்கு 31 லட்சம் பேஸ்புக் ரசிகர்களும், அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்சுக்கு 21 பேஸ்புக் ரசிகர்களும் உள்ளனர் என்று சானியா மிர்சா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சானியா மிர்சாவின் இந்த சாதனையை அறிந்த பிரதமர் நரேந்திரமோடியும், டிவிட்டரில் சானியா மிர்சாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் உள்பட தனது ரசிகர்கள் அனைவருக்கும் சானியா மிர்சா நன்றி தெரிவித்துள்ளார்.

