சப்னி,ரிஸ்லி-
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "முற்றத்து முகவரிகளின் முப்பெரு விழா " எதிர்வரும் ஞாயிறு அதாவது 2015.12.27 ஆம் திகதி வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக பேரவையின் தலைவர் தேசமான்ய ஜலீல் ஜி அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.
சென்ற திங்கட்கிழமை (21) காரைதீவில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது பேரவையின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் மிக முக்கியமான நிகழ்வாக இந்நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும் வரும் ஞாயிறு (27) காலை 9.30க்கு காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் இவ்வெளியீட்டு நிகழ்வினை வெளியிட பேரவை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டுடன் கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைசிங்கம் மற்றும் கிழக்கு மகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி அவர்களுடன் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தும் கிழக்கு மாகாண சபை பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் கருத்து தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது பேரவையின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான தேசமான்ய ஜலீல் ஜீயினால் எழுதப்பட்ட இடப்பெயர் தொல்லியல்ஆய்வு நூல், முற்றத்து முகவரிகள் தொகுப்பு நூல் (அம்பாறை மாவட்ட பெண் இலக்கிய படைப்பாளிகளின் தொகுப்பு நூல்) மற்றும் வேப்பஞ்சோலை தொகுப்பு நூல் என்பவன வெளியிடப்படவுள்ளது.
இந்நிகழ்வின் போது கலந்து கொண்டு பிரதியினை பெற உங்களையும் அன்போடு அழைக்கிறது பேரவையின் ஏற்பாட்டுக்குழு. கௌரவ. முதலமைச்சரின் கரத்தினால் "சிறப்புப் பிரதிகள்" பெற விரும்புகிறீர்களா ? தொடர்புபடுங்கள்- 077 980 2423




