இன்று முதல் சிகிரியாவில் புகைப்படம் எடுப்பதற்கு தடை..!

சிகிரியா ஓவியங்களை புகைப்படம் எடுப்பதற்கு இன்று (30) முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

சிகிரியாவின் சுவர் ஓவியங்கள் தொடர்பான இத்தீர்மானத்திற்கு, தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் கிறிஷாந்த குணவர்தன தெரிவித்தார்.

கமெராக்கள் மூலம் புகைப்படம் எடுக்கும்போது கமெராவின் அதீத ஒளி காரணமாக ஓவியங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் அளவில் சிகிரியா சுவர் ஓவியத்துடன் தொடர்பான, அதன் பின்புல பூச்சு கொண்ட பகுதி ஒன்று உடைந்து வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -