இந்தோனேஷியாவின் பந்த ஏஸெ மாகாணத்தில் ஷரியா சட்டம் நடைமுறையில் உள்ளது இங்கு உள்ள பைதூரஹீம் மசூதி அருகே நூர் எலிட்டா என்ற 20 வயது பெண் ஒருவர் தனது கணவர் அல்லாத ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாக கூறி அவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்மபடி கொடுக்கபட்டது.
பின்னர் அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். அங்கு ஷரியா சட்டத்தின் கீழ், திருமணமாகாத மற்றும் தொடர்பில்லாத ஆண்கள் மற்றும் பெண்கள் மிகவும் நெருக்கமாக இருக்க அனுமதி இல்லை.
மேலும் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வாயுடி சபுத்ரா (வயது 23) என்ற வாலிபருக்கும் பிரபடி தண்டனை கொடுக்கபட்டது. மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேருக்கும் அங்கு தண்டனை வழங்கபட்டது. இந்த பிரம்படி நிகழ்ச்சி பந்த ஏஸெ துணை மேயர் ஜைனல் அரிபின் முன்னால் நடத்தபட்டதாக ஜகர்தா போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.
