செயிட் ஆஷிப்-
கல்முனை மாநகர சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாளை வியாழக்கிழமை (2015-12-31) சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் முன்னாள் முதல்வர் மர்ஹூம் எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானாவுக்கான அனுதாபப் பிரேரணையும் நிறைவேற்றப்படவுள்ளது.
மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நாளை 2.30 மணி தொடக்கம் மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போதே முதல்வரினால் இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மர்ஹூம் எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானாவுக்கான அனுதாபப் பிரேரணையும் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்படவுள்ளது.
அத்துடன் சில வீதிகளுக்கு பெயர் மாற்றங்களை மேற்கொள்வதற்கான பிரேரணைகளும் இந்த சபை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
