ஹிருணிகா தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை..!

தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவரைக் கடத்திய சம்பவத்தில் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தொடர்பில் பொதுமக்களின் எதிர்ப்பு வலுவடையத் தொடங்கியுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக கருத்துக்களை பகிரத் தொடங்கியுள்ள பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கடத்தப்பட்ட இளைஞன் தான் ஹிருணிக்காவின் கொலன்னாவை அலுவலகத்தில் வைத்து தாக்கப்பட்டதாகவும், ஹிருணிக்கா தனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு ஹிருணிக்கா கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் நீதித்துறை வல்லுனர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் பொலிசார் பக்கச்சார்பாக நடந்துகொள்வதாகவும் பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்களின் இந்த எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் ஹிருணிக்கா தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரி பொலிஸ் திணைக்களம் நேற்று அறிக்கையொன்றை அனுப்பியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -