ஹிருணிகா கடத்தல் விவகாரம் :மேலும் இருவர் கைது

தெமட்டகொட பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இதேவேளை இந்த சம்பவம் குறித்து ஹிருணிகாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கை சட்டமாக அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

அவரது ஆலோசனைப் படி மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைதுசெய்யப்பட்ட அறுவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -