ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் அணிவது தடை - ஜனவரி முதல் அமுலில் இந்தியா


அறிவித்தல்: குறித்த செய்தியில் முன்னர் இலங்கை ஜனாதிபதியின் புகைப்படம் தவறுதலாக இணைக்கப்பட்டது . குறித்த தவறுக்கு உங்கள அனைவரிடமும் மண்ணிப்புக்கேட்கின்றோம்.  -  பிரதம ஆசிரியர் (இம்போட் மிரர்)
ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த ஆடைக் கட்டுப்பாடு வரும் ஜனவரி 1ஆம் திகதி அமுலுக்கு வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி பழையபாளையம் அக்கியம்பட்டியில் உள்ள செண்பக விநாயகர் கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை கடந்த 1ஆம் திகதி நடைபெற்றது. அப்போது, கோயில் நிகழ்ச்சிகளுக்கு பல நிபந்தனைகளை விதித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ஆடைக் கட்டுப்பாடு குறித்தும் உத்தரவிட்டார். அவர் தனது உத்தரவில் கூறியதாவது:

கோயில்களுக்கு செல்லும் போது ஒழுக்கமான ஆடைகள் அணிவது, சுத்தம், நாகரிகம் ஆகியவற்றை அனைத்து மதங்களும் கற்பிக்கின்றன. கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் வழிபாட்டுக்கு செல்லும்போது தனி ஆடைக் கட்டுப்பாடு உள்ளது. இந்து கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக அறநிலையத் துறை விரைவில் முடிவெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் 2016 ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆண்கள் வழக்கமான மேலாடையுடன் வேஷ்டி, பிஜாமா, பேன்ட்டும், பெண்கள் மேலாடையுடன் கூடிய சுடிதார், சேலை, தாவணியும், குழந்தைகள் முழுமையாக மூடப்பட்ட ஏதாவது ஒரு ஆடையும் அணிந்து வரவேண்டும். மாறாக அரை காற்சட்டை, மினி ஸ்கர்ட், மிடி, கையில்லாத மேலாடை, இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டிஷேர்ட் போன்றவற்றை அணிந்து வருபவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது.

பொலிஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு படையினர், பாதுகாவலர்கள் அவர்களது சீருடையில் வர அனுமதிக்கலாம். இந்த ஆடைக் கட்டுப்பாட்டை தீவிரமாக அமுல்படுத்துமாறு அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை கடிதம் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.

இதைத் தொடர்ந்து, கோயில்களின் பாரம்பரியத்துக்கு ஏற்ப ஆடைக் கட்டுப்பாட்டை பின்பற்றுமாறு தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக துறையின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

திருச்செந்தூர் கோயிலில் ஆண்கள் மேலாடை அணியக் கூடாது. கன்னியாகுமரி கோயிலில் பேன்ட் அணியக் கூடாது. இது மட்டுமின்றி பெண்கள் துப்பட்டா இல்லாத ஆடைகள், லெகிங்ஸ், ஜீன்ஸ், டிஷேர்ட் போன்றவற்றை அணியக்கூடாது. ஆண்கள் அரை காற்சட்டை அணியக் கூடாது என்று தமிழகத்தின் பல கோயில்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -