உம்மா நான் உம்றாக்கு போறன்..!

ம்மா நான் உம்றாக்கு போறன் -தொடர்ந்து
ஒவ்வொரு வருடமும் ஓயாமல் போறன்.
சும்மா நான் ஜொலிக்காகப் போறன்-இங்கு
ஷோ காட்டி வாழாட்டி சுற்றத்தார் மதிக்கார்.

சாச்சி பெரியம்மா பசியால்-ஊரில்
சாகக் கிடந்தாலும் நான் உதவ மாட்டேன். 
ஈச்சம் பழம் கொண்டு வருவேன்-அதன்
இடையில தங்கம் பிஸ்கட்டா இருக்கும்.

பருப்போடு பாண் தின்னும் போதும்-பின்னர்
பள்ளியில் பக்தியாய் தவாப் செய்யும் போதும்
குறூப்போடு செல்பிகள் எடுப்பேன்-fbயில்
குறிப்போடு போட்டு குஷியாக இருப்பேன்.

விமானத்தில் தருகின்ற பெட்சீட்-அதை
விளங்காமல் சுருட்டி
வைப்பேனே பேக்கில்
அமானத்தை நான் பேண மாட்டேன்-ஆனாலும்
அடுக்காக உம்றாக்குப் போவேன்

செக்குக்கு டேட் போட்டு கொடுப்பேன்-பின்
செரியான டேட்டுக்கு பணம் போட முன்னால்
மக்காக்கு டக்கென்று போவேன்-அந்த
மக்கிங்கு செக்கோடு சிக்கலில் தவிப்பான்.

உம்றாக்கு போகின்ற பலபேர்
உண்மையில் நல்லோர்கள்
உயர்ந்திட்டார் அமலில்.
சும்மாவும் போகின்றார் சிலபேர்-இங்கு
சொன்னது அந்த சிலபேர்க்கு மட்டும்.

காத்தான்குடி நிஷவ்ஸ்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -