கொழும்பு, கங்காராமையில் நேற்று நடைபெற்ற விசேட வழிபாட்டு நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.
கங்காராமையின் விகாராதிபதி கலபொட ஞானிஸ்ஸர தேரரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த விசேட வழிபாட்டு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வழிபாடுகளின் பின்னர் மஹிந்தவும் , ரணிலும் சற்று நேரம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
பின்னர் ஒன்றாகவே சென்று இருவரும் விகாராதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
கங்காராமை விகாரையின் நிர்வாக உறுப்பினர் குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முக்கிய உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
