மீதொட்டமுல்லை குப்பை மேட்டு பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த கொலன்னாவ நகர முதல்வர் ரவீந்ர உதயசாந்த, எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மனுவொன்றின் மூலம் கொழும்பு கோட்டை மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மேலதிக நீதவான் ஒகஸ்டா அத்தபத்து வெல்லம்பிட்டிய காவற்துறைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பக்கசார்பாக செயற்பட்டு சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
