எப்.முபாரக்-
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் 41நாட்களுக்குள் சுகாதார அமைச்சை பொறுப்பேற்று வினைத்திரன் மிக்கதொரு அமைச்சாக மாற்றியதோடு கிழக்கில் உள்ள வைத்தியசாலை புத்துணர்ச்சியுடையதாக மாற்றியமைத்த பெருமை சுகாதார அமைச்சரான ஏ.எல்.எம்.நஸிரையே சாரும்.என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சுக்குரிய வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் புதன்கிழமை (23)கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரக்குமார் பிரசன்ன தலைமையில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கிழக்கு மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை (21) நாற்பது சுகாதார தாதிகளை நியமித்ததோடு இதில் மூதூர் வைத்தியசாலைக்கு ஏழு பேரும், கிளிவெட்டி வைத்தியசாலைக்கு ஆறு பேரையும், தோப்பூர், தம்பலகமம், கிண்ணியா, மற்றும் குச்சவெளி வைத்தியசாலைக்கு தலா ஒருவருமாக நியமித்ததோடு திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் வைத்தியசாலையை தள வைத்தியசாலையாகவும், குச்சவெளி பிரதேச வைத்தியசாலையை தள வைத்தியசாலையாகவும் மாற்றியமைத்து 41 நாட்களுக்குள் கிடைத்த பாரிய மாற்றமாகும்.
இம்மாவட்டத்தின் கிண்ணியா வைத்தியசாலைக்கு முப்பது மில்லியனும், மூதூர் வைத்தியசாலைக்கு அறுபது மில்லியன் ரூபாவையும் ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு இது இன்னமும் நிறைவு பெறாமல் இருக்கின்றது இதனை சுகாதார அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்தோடு கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு மாட்டத்திற்கும் தனியான சிறுவர் பராமரிப்பு இல்லங்களை அமைத்து அதன் மூலம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று மூதூர் தோப்பூருக்கான மத்திய மருந்தகங்களை சிறப்புறச் செய்ய வேண்டும். தனியான மாவட்டங்களுக்குரிய புதிய செயலணியை அமைத்து நெறிப்படுத்துவதோடு சித்த யூனாணி வைத்தியத்துறையை மேம்படுத்தவும் வேண்டும்.
