ஜம்இய்யாவினால் பீ.ஜேயின் வருகையை தவிர்ந்து கொள்வது நல்லது எனக் குறிப்பிட்டு SLTJ அமைப்புக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்ததை பெரும் விமர்சையாக மீடியாக்களில் பேசப்பட்டு வருகின்றது. குறித்த இவ்வமைப்பு ஜம்இய்யாவிற்கு பல சவால்களை விட்டவண்ணமும் உள்ளது. மேலும் கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்இய்யத்துல் உலமா எப்போது உணர்ந்து கொள்ளும்? என ஜம்இய்யாவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தினையும் அவர்களின் இணையதளத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது.
குறித்த இவ்வமைப்பின் வார்த்தைகள் பேச்சுக்கள் வசீகரமாகவும், கேட்பதற்கு இனிமையாகவும், பார்பதற்கு அழகாகவும் தான் இருக்கின்றது. என்றாலும் அது மலத்தில் உள்ள பழத்தை போன்றது.
அண்மையில் நடந்த இவர்களின் குர்ஆன் வெளியீட்டு விழாவில் நாம் அண்ணன் பீ.ஜே யை பின்பற்றவில்லை. அவர்கள் சாதாரண ஒரு மனிதர்தான். அவர்களின் கருத்தைத்தான் நாம் ஏற்கின்றோம் அதனைத் தான் நாம் எம்வழியில் கடைபிடிக்கின்றோம் என்பதாக சகோதரர் ரஸ்மின் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இதில் பல இடங்களில் ஸஹாபாக்களை ஏளனமாக எழுதியுள்ளான். ஒரு சில இடங்களை மாத்திரம் சுட்டிக்காட்டுகின்றேன்.

வஹீயில்லாமல் நேர்வழியை அறிய முடியாது என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டுள்ள விடயத்தில் ஸஹாபாக்கள் ஆட்சியாளர்களுக்கு பயந்து உண்மையை மறைத் திருப்பார்கள் என்ற யூகத்தைத் தந்திரமாக முன்வைக்கிறார்.
தொடர்ந்தும்....
வஹீயில்லாமல் நேர்வழியை அறிய முடியாது என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டுள்ள விடயத்தில் ஸஹாபாக்கள் ஆட்சியாளர்களுக்கு பயந்து உண்மையை மறைத் திருப்பார்கள் என்ற யூகத்தைத் தந்திரமாக முன்வைக்கிறார்.
தொடர்ந்தும்....
தனக்குப்பின்னால் ஒரு நபிவரும் என்றிருந்தால் அது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் வருவார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்துக் கூறும்போது இங்கு அண்ணன் அவர்கள் பிழையான வாதங்களை முன்வைத்து உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிவழிக்கு மாற்றம் செய்தார்கள் என தந்திரமாக முன்வைக்கின்றார்.
கடைசிப் பக்கத்தில்....
ஸஹாபக்களை விட நாம்தான் அறிவாளிகள் அவர்களுக்கு நவீன அறிவுகள் சம்பந்தமாக ஒன்றும் தெரியாதவர்கள் என அவர்களை கீழ்மட்டத்திற்கு கொண்டு தனது புத்தகத்தை எழுதி முடித்துள்ளார்.
இவ்வாறு கண்ணியமான ஸஹாபாக்களைப் பற்றியுள்ள தனது ஏளனமான நிலைப்பாட்டை அண்ணன் தனது இப்புதகத்தில் கூறிப்பிட்டுள்ளான்.
இவ்வாறான கீழ்த்தரமான அவனது கருத்துக்களைத்தான் இந்த SLTJ என்ற அமைப்பும் பின்பற்றுகிரார்கள். இது ஸஹாபாக்கள் விடயத்தில் அவர்கள் எடுத்துள்ள மிக மோசமான ஒரு நிலைப்பாடாகும். எனவே இச்சந்தர்ப்பம் அவர்களுடன் கருத்து பரிமாறிக்கொண்டிருக்கும் நேரம் அல்ல.
ஏனெனில்! ஸஹாபாக்கள் விடயத்தில் அல்லாஹ்வே தனது குர்ஆனில் அவர்களை நான் பொருந்திக் கொண்டுவிட்டேன் என குறிப்பிடும் போது நாம் அவர்களின் தவறுகளையோ குறைகளையோ பேச அருகதையற்றவர்கள்.
ஏனவே முதலில் SLTJ என்ற இந்த அமைப்பானது பீ.ஜேயானிஸ கொள்கையில் இருந்து தௌபா செய்து மீளட்டும். அதன் பின் அவர்களுடனான பேச்சுவார்த்தைகளையோ கருத்துப் பரிமாறல்களையோ ஜம்இய்யா மேற்கொள்ளட்டும். அதுவரை அவர்களுடன் எவ்விதப் பேச்சுவார்ததைக்கும் போக வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரம் இவர்களின் ஷீயாக்களை விட மிக மோசமான இந்தக் கொள்கையைப் பற்றி பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தி நல்லவழி காட்டுவதில் இன்னும் தாமதிக்க வேண்டாம் என ஜம்இய்யா விடம் நான் வேண்டிக் கொள்கின்றேன்.

