அரசியர் கைதிகளின் விடுதலைக்கான ஹர்த்தால் நியாயமானது - தமிழ் தேசியக் கூட்டமைப்பு

எப்.முபாரக் -
சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஹர்தால் அனுஸ்டிக்கப்படுவது நியாயமன ஒரூ கோரிக்கையும் போராட்டமுமாகும் அவர்களின் விடுதலையைப் துரிதப்படுத்தப்பட வேண்டும். என திருகோணமலை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார். 

இன்று வெள்ளிக்கிழமை(13)வடக்கு கிழக்கு மாகாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ள ஹர்த்தால் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகாளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமன்றி இதர சிறுபான்மைக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.இன்றைய ஹர்த்தாலுக்கு கூட சில சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன.

அரசாங்கம் இந்த நல்லாட்சியில் சிறந்த முடிவொன்றினை வழங்க வேண்டும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான ஒரு தீர்க்கமான முடிவொன்றினை எடுப்பதற்கு நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபாலவைக் கூட சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இது வரைக்கும் விடுதலைக்கான எந்த ஏற்பாடுகளும் தீர்க்கமான முறையில் மேற்கொள்வதை காணவில்லை. 

இன்று வெள்ளிக்கிழமை (13) ஏற்படுத்தியிருக்கின்ற வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான ஹர்தாலைக் கருத்தில் கொண்டு நல்லாட்சி அரசாங்கம் சிறந்த முடிவினை அரசியல் கைதிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -