செய்தியாளர்- ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
தோப்பூர் பிரதேசத்தில் கல்வித்துறைக்கு பங்காற்றி பணி செய்த ஓய்வுபெற்ற அதிபர்,ஆசிரியர்களை பாராட்டி, பதக்கமனிவித்து,பொன்னாடை போற்றி பொற்கிழி வழங்கும் வைபவமொன்றினை தோப்பூர் அல்-ஹம்றா மத்திய கல்லூரி ஏற்பாடு செய்துள்ளது.
கல்லூரியின் முதல்வர் ஏ.பீ.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் 33 ஓய்வுபெற்ற கல்விமான்கள் கௌரவிக்கப்படவுள்ளனர் நாளை சனிக்கிழமை மு.ப.9.00 மணிக்கு கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்வின் பிரதம அதிதியாக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அகீலா கனகசூரியம்,தோப்பூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.ஏ.ஜப்பார்,பிரபல தொழிலதிபரும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தவிசாளருமான அஷ்ஷய்க் எஸ்.எல்.அப்துல் றஸ்ஸாக்(நளீமி) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
