P.J .வருகைக்கு அசாத் சாலி எதிர்ப்பு : இதில் மூக்கை நுழைக்கும் தேவை அவருக்கு இல்லை - அஸ்மி ஏ கபூர்

ரே இடத்திலிருந்து இருவரை உருவாக்கி இருவரையும் மோதவிட்டு இருவரையும் தாமே வளர்த்து தமது காரியங்களை சாதித்துவிடல். சர்வதேச உளவு நிருவனங்களின் பிரதான வேலை இதுவாகத்தான் இருக்கிறது. 

இதே விடயம்தான் கடந்த கால ஆட்சி மாற்றத்தின் போது முஸ்லீம்களுக்கு எதிரான ஆதரவு குரல்களாக ஒலித்திருக்குமோ என்கிற அச்சம் இன்று மெல்ல உணரப்படுகிறது என்று அக்கரைப்பற்றின் முன்னாள் மாநகர சபையின் உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஆசாத் சாலி முஸ்லீம்களின் குரலாக தன்னை பிரகடனப்படுத்தி பொதுபலசேனா மகிந்த ராஜபக்ஷ அரசுக்கெதிராக குரல் கொடுத்தார் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது பெரும்பான்மை முஸ்லீம்கள் ஆட்சி மாற்றத்தை கோரி நின்றனர். 

அது மெல்ல நகர்ந்து இப்போது முஸ்லீம்களின் இஸ்லாத்தின் ஏக எதிரி இஸ்ரேலை இலங்கைகுள் உள் நுழைவிக்கும் அஜன்டா வின் ஒரு அங்கமாக அந்த நாட்டு பாராளுமன்ற குழு இலங்கை வந்தது.

இதே போல் 1986 1987 ஆண்டு காலப்பகுதியில் இஸ்ரேல் நலன்காக்கும் பிரிவு ஜே ஆர் அவர்களால் வரவழைக்கப்பட்ட போது குத்பா மிம்பர்களிளும் இஸ்ரேலுக்கெதிரான கோசங்களும் எதிர்கட்சிகளும் பொதுமக்களும் இணைந்து ஆர்பாட்டங்களிலும் கடையடைப்புகளிலும் ஈடுபட்டனர். இதன் போது பொலிசாரின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான நிந்தவூர் அலியார் என்ற பாடசாலை மாணவன் இடுப்புக்கு கீழ் செயலிழந்து இன்னமும் நடைபிணமாக வாழுகிற செய்தி எம்மில் எத்தனை பெயருக்கு தெரியும்.

இன்று மஸ்ஜிதுல் அக்ஸா எமது முதலாவது புனித பள்ளியை இஸ்ரேலவர்கள் தாக்கி எம் உம்மத்தை அழிக்கும் போது அவர்கள் இலங்கையில் கால் பதிக்க தனது பாரளுமன்ற குழுவை அனுப்பி இருக்கிறார்கள்.

அதை பற்றி பேசா மடந்தையாக இருந்த ஆசாத் சாலி P.J .வருகிற போது தாராபச்சை கட்டுவது அரசியலுக்காக இவர் சமுகத்தை பிழையான வழியில் வழிநடத்துகிறார் என்பது திண்ணம் மார்க்கம் தொடர்பான விடயத்தில் தனது மூக்கை நுழைக்க அவருக்கு தேவையேதுமில்லை.

அஹ்லுல் சுன்னத்தினர் SlTJ, ACJU, ACTJ ஜமத்தே இஸ்லாமி தரிக்கா போன்றவற்றின் இமாம்கள் கூடி தங்களினுடை மார்க்க விடயங்களின் முடிவுகள் பெறுவதும் பத்வாக்கள் அறிவிப்பதும் ஒழிய எந்த மார்க்க அறிஞரை வரவேண்டும். வரக்கூடாது என்கிற முடிவை ஆசாத் சாலி போன்றோர் கையிலெடுக்க முடியாது

அதை விட முக்கியமான இஸ்லாத்தின் எதிரி இஸ்ரேலை வெளியேற்ற எமது உரத்த குரலையும் ஒற்றுமையையும் உலகறியச்செய்வோம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -