மலையகத்தில் கடும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...!



க.கிஷாந்தன்-

லையகத்தில் 05.11.2015 அன்று மாலை பெய்த கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் 05.11.2015 அன்று வியாழக்கிழமை மாலை பெய்த கடும்மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மேற்படி தோட்டப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்ததால் வெள்ளம் அப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கும், கடைகளுக்கும் உட்புகுந்ததால் 70 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

எனினும் நீர் வடிந்து சென்றதன் பின் தங்களுடைய வீடுகளுக்கு சென்று விட்டனர். இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். 

அத்தோடு அட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியிலான வீதி 05.11.2015 அன்று இரவு நீரில் மூழ்கியது. இதனால் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இடைவிடாது பெய்துவரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

மேலும் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்டத்தை சேர்ந்த 25 வீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்ததனால் மக்கள் இடம் பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். இதே போல நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலரண்டன் தோட்டத்தில் 45 க்கு மேற்பட்ட வீடுகளும் நீரில் மூழ்கி உள்ளன.

இது தவிர தலவாக்கலை டயகம பிரதான வீதியில் பாரிய கற்பாரைகள் சரிந்து விழுந்ததால் சில மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. அக்கரப்பத்தனை ஹோல்புரூக் நகரத்தில் ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அருகாமையில் பாரிய மண்மேடுகள் சரிந்த வண்ணம் இருப்பதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதனால் மேலும் அனர்த்தங்கள் நிகழக்கூடும் என மக்கள் கருதுகின்றனர். கடும் மழை காரணமாக பெருமளவு பயிர்ச்செய்கை நிலங்களும் நீரில் மூழ்கி உள்ளன.

மேலும் அக்கரபத்தனை ஆகுரோவா தோட்டத்தில் மண்மேடு சரிந்துள்ளது. இதன்காரணமாக மூன்று வீடுகள் சேதமாகியுள்ளது. அத்தோடு அதே தோட்டத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் பின் பகுதியில் பாரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அக்கரபத்தனை நல்லதண்ணி தோட்டத்தில் மண்சரிவால் 03 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது.

அத்தோடு லக்ஸபான பிரதேசத்தில் 05.11.2015 அன்று முதல் பெய்து கடும் மழை காரணமாக லக்ஸபான நீர்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் இரண்டு அங்குலத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், நோட்டன் பகுதியில் பெய்த கடும் மழையினால் விமல சுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு மேலாக வெள்ளம் பெருகெடுத்துள்ளதாகவும், அத்துடன் காசல்ரீ நீர்தேக்கத்தில் அணைக்கட்டுக்கு மேலாக நீர் பெருக்கெடுத்துள்ளது. 

மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் நீர் நிரம்புவதற்கு இன்னும் ஐந்து அடி மாத்திரமே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சிய மழை பெய்யும் பட்சத்தில் மலையகத்தில் உள்ள ஏனைய நீரத்தேக்கங்களின் வான்கதவுகளும் திறந்தவிட வேண்டிய நிலை காணப்படுவதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ்பகுதியில் ஆற்றுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மரக்கறி மற்றும் தேயிலை உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

மழை காரணமாக பல இடங்களில் சிறிய அளவில் மண்வரிசு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்புக்களும் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -