எம்.எம்.ஜபீர்-
காரைதீவு பிரதேச செயலக கலாசார பேரவையின் ஏற்பாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவடிப்பள்ளி அல்-அ~;ரப் வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நேற்று (05) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அ~;n~ய்க் எம்.ஐ.அமீர், முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.சமீல், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், அம்பாரை மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக், காரைதீவு பிரதேச செயலக கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், உதவி திட்டமிடல் பணிப்பாளர்களான எம்.ஜௌபர், திருமதி கிருபைராஜா, காரைதீவு பிரதேச செயலக திவிநெகும தலைமைப் பீட முகாமையாளர் எம்.எஸ்.ஹம்ஸார், காரைதீவு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.சிவானந்தம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பெரும் திரளான பொது மக்கள் கலந்துகொண்டனர்.
கலை, கலாசார பாரம்பரிய நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வுகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசில்கள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது கலந்துகொண்ட அதிதிகள் பிரதேச செயலக கலாசார பேரவையினால் நினைவுச் சின்னம் மற்றும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.









