அமைச்சில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு சுகாதார அமைச்சரின் வேண்டுகோள்..!

செய்தியாளர்-அபு அலா
மைச்சில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தங்களின் கடமையினை மிக சரியாகவும், திறன்படவும் முன்னெடுக்கவேண்டும். அப்போதுதான் அமைச்சினதும், பொதுமக்களினதும் கடமைகளை மிகச் சரியாக முன்னெடுக்க முடியும் என கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் கடமையாற்றும் உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கூட்டம் இன்று வியாழக்கிழமை (12) காலை அமைச்சரின் காரியாலயத்தில் இடம்பெற்றபோது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

குறிப்பாக கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் மதித்து அவர்களுக்கு தேவைப்படும் அலுவலக தேவைப்பாடுகளை மிக விரைவாகவும் சரியாகவும் உடனக்குடன் செய்துகொடுக்க முனையும் இதேவேளை இங்கு கடமையாற்றும் உயரதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் ஒரு கூட்டுக் குடும்பமாக செயற்படல் வேண்டும். அத்துடன் உங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள உயரதிகளுடன் தொடர்பு கொண்டு அதற்கு தீர்வினை பெற்றுக்கொள்ளவும். அப்படித்தவரும் பட்சத்தில் எனக்கு தெரியப்படுத்தவும். 

நான் அமைச்சில் இல்லையென்று நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எனது அலைபேசிக்கு தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை தெரியப்படுத்தலாம். ஆனால் உங்களின் கடமைகளில் மிக கன்னியமாகவும் திறமையாகவும் செயற்படல் வேண்டும். அத்தோடு உங்களின் உயரதிகரிகளை மதித்து அவர்களின் ஆலோசனைகளுக்கமைவாக செயற்படல் அவசிம் என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -