திருகோணமலையில் வீடொன்று எரிந்து நாசம்..!

செய்தியாளர்-எப்.முபாரக்
திருகோணமலை கடல்முக வீதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உடைமைகளும் வீடும் எரிந்து சேதமாகியுள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை(10) இடம்பெற்றுள்ளது.

சம்பவதினத்தன்று வீட்டிலுள்ளவர்கள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கையில் வீட்டின் வழிபாட்டறையிலிருந்து தீப்பற்றிய புகைமண்டலம் வீட்டுக்குள் பரவியது.

இதையடுத்து வீட்டு மின் சுற்றுக்கான இணைப்பைத் துண்டித்து, தீ அணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து தீயணைப்பு படையினர் உடன் வந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.

இதன்போது மடிக்கணினிகள், ஆவணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் பல சேதமாகியுள்ளன.

வழிபாட்டறையில் ஏற்றப்பட்டிருந்த விளக்கில் உள்ள திரியினை அணில் எடுத்துச் சென்றதால் இவ்வனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று வீட்டுரிமையாளர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -