அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானம் நவீன முறையில் புனராமைக்கப்படும் - பிரதி அமைச்சர் ஹரீஸ்

செய்தியாளர்-எம்.ஐ.எம்.றியாஸ்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் விவகார தொழில் வாய்ப்புத்துறை தொடர்பான செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஏ.எல்.தவத்தின் அழைப்பின் நிமிர்த்தம் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான குழுவினர் இன்று (12) இங்கு விஜயம் செய்தனர். 

இம் மைதானத்தின் குறைபாடுகள் பற்றியும் இதற்குள்ள பார்வையாளர் அரங்கு அமைப்பது தொடர்பாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் அக்கரைப்பற்று மாநகர சபையினர் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் வீரர்கள் இதன் போது பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். 

இப்பொது மைதானத்தின் தேவைப்பாடுகளை அறிந்து கொண்ட பிரதி அமைச்சர் தனது அமைச்சின் ஊடாக இம்மைதானத்தை புனராமைப்புச் செய்து விஸ்தரிப்பதாகவும் இதற்கான வடிகான் அமைப்பு மற்றும் பார்வையாளர் அரங்கு அமைப்பதாகவும் இதன் போது உறுதிப்படத் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடிஸ்வரன் (ரொபின்) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு அபிவிருத்தித் திணைகளத்தின் பணிப்பாளர் நாயகம் கே.டி.எஸ்.றுவான் சந்திரே பிரதி விளையாட்டுத்துறை அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.ஏ.அன்சில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் அக்கரைப்பற்று மாநகர சபையின் செயலாளர் ஏ.எம்.ஹபீபுறஹ்மான் அக்கரைப்பற்று உதைப்பாந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் அதிபர் எம்.பீ.செயினுலாப்தீன் அம்பாறை மாவட்ட விளையாட்டு பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜுதீன் அக்கரைப்பற்று பிரதேசசெயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஜ்வத் உட்பட முக்கியஸ்தர்கள் அரசியல் பிரமுகர்கள் விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -