கரீம் ஏ.மிஸ்காத்-
வடமேல் மாகாண சுகாதார அமைச்சர் லக்ஸ்மன் அவர்கள் இன்று புத்தளம் தள வைத்தியசாலைக்கு, குறை நிறைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
இதன்போது, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்; நவவி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக்க மாயாதுன்ன, வடமேல் மாகாண சபை உறுப்பினர் தாஹிர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் இணைப்பாளர் அலி சப்ரி, வடமேல் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் என்.எம். பரீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக, வடமேல் மாகாண சுகாதார அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது, குறைகளை கேட்டறிந்த சுகாதார அமைச்சர், இவ் வைத்தியசாலைக்கு புதிய கட்டடம் ஒன்றினை நிர்மாணித்து தருவதாக உறுதியளித்தார்.



