முதலமைச்சரினால் வீடமைப்புக்கான நிதி வழங்கிவைப்பு..!

கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் நிதியில் இருந்து நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சபையின் 2015- PSDG நிதியில் இருந்து கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மூலம் 48 பயனாளிகளுக்கு 100,000 ரூபாய்கள் வீதம் வழங்க திட்டமிட்டு முதற்கட்டமாக 40,000 ரூபாய்கள் வீதம் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினால் வழங்கிவைக்கப்பட்டன.

அடுத்த கட்டமாக,40,000 ரூபாய்களும் அதன் பின்னர் 20,000 ரூபாய்களும் மீண்டும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி, மாகாணசபை உறுப்பினர் துரை ரட்ணம் ஆகியோரும் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -