எப்.முபாரக்-
கந்தளாய் பிரதேசத்தில் பத்து கஞ்சா கட்டுகளுடன் ஒருவரை சனிக்கிழமை (7) மாலையில் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக கஞ்சா பாவணைகள் அதிகரித்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்ற அதேவேளை. கைது செய்யப்பட்ட 47 வயதுடைய சந்தேக நபர் கஞ்சா வியாபாரி என்றும் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும், அவருக்கெதிராக வழக்கென்று நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் கந்தளாய்பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
