பொத்துவில் தப்லீக் ஜமாத் அமைப்பின் பொறுப்புதாரி மௌலவி எம்.எல். பசில் இன்று வபாத்தானார்..!

எம்.ஏ. தாஜகான்-
பொத்துவில் அனைத்து பள்ளிவாயல் சம்மேளனத்தலைவரும், பொத்துவில் சபீலுர்ரஸாத் அரபிக்கல்லூரி விரிவுரையாளரும், பொத்துவில் தப்லீக் ஜமாத் அமைப்பின் பொறுப்புதாரியுமான மௌலவி எம்.எல். பசில் (தப்லீக்) இன்று (8) கொழும்பு பொதுவைத்தியசாலையில் வபாத்தானார். 

தப்லீக் பிரச்சாரப்பணிக்காக வேண்டி வெளியூர் ஜமாத் சென்ற பொழுதில் இரவுநேரத் தஹஜ்ஜத் தொழுகைநேரம் மயக்கம் ஏற்பட்டு உடனடியாக பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதன்பின்னர் கொழும்பு வைத்தியசாலையில் மாற்றப்பட்டும் தீவிர சிகிச்சை பலனின்றி இன்று வபாத்தானார் . 

பொத்துவிலின் மார்க்கப்பணியில் முன்னின்று செயற்பட்ட உலமா மாத்திரமன்றி பொத்துவில் உலமாசபையின் உபதலைவராகவும், பொத்துவிலின் சமூக, சமய, நல்லிணக்கத்திற்காக வேண்டி தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவர் வபாத் ஆகின்ற பொழுதில் 36 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -