ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஏதுவாக நேற்று கண்டியில் நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில் அரசியல் உச்சபீடத்துக்கான நிருவாக உத்தியோகத்தர்கள் மேலதிகமாக 05 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். இதன் பிரகாரம் உயர்பீட நிருவாக உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 23யில் இருந்து 28 ஆக அதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கட்சியின் உயர்பீட கூட்டங்களுக்கான செயலாளராகவும் ஒருவர் நியமிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
01.சமூக சேவை மற்றும் அனர்த்த நிவாரண விவகார செயலாளர் – ஆர். அன்வர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.
02.இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு விவகார செயலாளர் - ஏ.எல். தவம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.
03.அரசியல் மற்றும் சமய விவகார செயலாளர் – எம்.ஏ.அன்சில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்.
04.கல்வி மற்றும் கலாசார விவகார செயலாளர் – பழீல் பீ.ஏ.
05.அதியுயர் பீட கூட்டங்களுக்கான செயலாளர் – மன்சூர் ஏ. காதர், பிரதிப் பதிவாளர் - தென் கிழக்கு பல்கலைக்கழகம்.
06.தொழிற் சங்க விவகார செயலாளர் – மஹிலால் சில்வா, செயற்பாட்டு பணிப்பாளர் - நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -