சர்ச்சையை ஏற்படுத்தியது செந்தூரனின் கடிதம் - நடந்தது என்ன..?

ரசியல் கைதிகளுக்காக உயிர் நீத்த கோப்பாய் மாணவனின் கடிதம் தொடர்பில் இரண்டு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் யாழ். கோண்டாவிலில் புகையிரதத்தின் முன் பாய்ந்து பாடசாலை மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

18 வயதான இராஜேஸ்வரன் செந்தூரன் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது சடலத்துக்கு அருகே காணப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய கடிதம் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்கட்டினார்.

குறித்த அப்பியாசக் கொப்பியில் இருந்த அந்த கடிதமானது, உண்மையில் தற்கொலை செய்யமுன்னர் அந்த மாணவனினாலேயே எழுதப்பட்டதா? அல்லது சம்பவத்தின் பின்னர் எவரேனும் அதனை அங்கு கொண்டுவந்து போட்டனரா? என்பது குறித்து இதன் போது விஷேடமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சஞ்சீவ ஜயகொடியின் கீழ் விஷேட விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இரு வேறு கோணங்களில் இந்த விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

குறித்த மாணவன் எழுதி வைத்ததாகத் தெரிவிக்கப்படும் கடிதத்தில் பலத்த சந்தேகங்கள் எழுகின்றன. கலைப்பிரிவில் கற்கும் மாணவன் எழுத்துப் பிழைகள் விட சந்தர்ப்பங்கள் இல்லை. அத்துடன் ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுத வேண்டிய அவசியமும் இல்லை.

ஆங்கில வார்த்தைகளை எழுதிய போது அந்த வார்த்தைகள் இன்னொரு தாளில் எழுதியதைப் பார்த்து எழுதியதாகவே தோன்றுகின்றது. மற்றைய வார்த்தைகள் தொடர்ச்சியாக எழுதிய பின்னர் இந்த ஆங்கில சொற்கள் பார்த்து எழுதப்பட்டுள்ளது கடிதத்தில் தெரிகின்றது.

அத்துடன் உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் எந்த ஒரு மாணவனும் தான் facluty of art என்று எழுதுவதில்லை. பல்கலைக்கழகத்தில் கற்பவர்களே இவ்வாறு எழுதுவார்கள்.

அத்துடன் அரசியல் கைதிகளுக்காக நான் உயிரைத் தியாகம் செய்கின்றேன் என்றோ அல்லது தற்கொலை செய்கின்றேன் என்றோ எந்த ஒரு வார்த்தையும் அதில் காணப்படவில்லை. ஆகவே இவனது மரணம் மிகவும் சந்தேகப்படும்படியாக அமைந்துள்ளது.

சிறையில் வாடும் எமது உறவுகளை விடுவிப்பதற்கா எந்தவித அகிம்சைச் செயற்பாடுகளில் ஈடுபட்டாவது அவர்களை வெளியே கொண்டுவரவேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் கடமையாகும்.

இதே வேளை சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த அரசியல்கைதிகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதி மொழியை அடுத்து (இவ்வாறு ஏற்கனவே அவர்கள் பல உறுதி மொழி கொடுத்துள்ளார்கள்) தமது உண்ணாவிரத்தைக் கைவிட்டுவிட்டார்கள். அவர்களே தமது உயிரின் பெறுமதியை அறிந்து கொண்டுள்ளார்கள்.

ஆனால் இளவயதில் இந்த மாணவன் தனது சுயமான போக்கில் இவ்வாறு முடிவெடுத்திருந்தால் அவனது முடிவு முழு முட்டாள் தனமானதாகும். இவ்வாறு முட்டாள் தனமாக தன்னிச்சைப் போக்கில் உயிரை மாய்ப்பது கேடு கெட்ட செயல்.

இந்த மாணவனை அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தற்கொலை செய்வதற்கு யாராவது துாண்டி தற்கொலை செய்ய முற்பட்டிருந்தால் அவர்கள் துாக்கில் தொங்கப்பட வேண்டியவர்கள். அது யாராக இருந்தாலும் மன்னிக்க முடியாத குற்றமாகும். குறித்த மாணவனை மூளைச் சலவை செய்தவர்கள் நிச்சயம் தமிழ்த்தேசியபற்றுள்ளவர்களாக இருக்க முடியாது.

அவர்கள் ஒரு தந்தைக்குப் பிறக்காதவர்களாக இருக்கலாம். ஏனெனில் அடுத்தவனை சாகவிட்டு தமக்கு அரசியல் லாபம் தேட முற்படுபவர்கள் நிச்சயம் இந்த மண்ணில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சில வேளைகளில் இது குடாநாட்டில் குழப்பத்தை விளைவிப்பதற்காக தீய சக்திகள் மேற்கொண்ட திட்டமிட்ட சதியாகவும் இருக்கலாம். ஏற்கனவே வித்தியா கொலை வழக்கிலும் இவ்வாறே சில சக்திகள் புகுந்து கொண்டு குடாநாட்டை குழப்பியது நினைவில் இருக்கலாம். இவ்வாறான சக்திகளால் யாழ் பல்லைக்கழகத்தினுள்ளும் சில மாணவர்கள் இயக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

ஆகவே குறித்த மாணவனின் மரணத்தையிட்டு உணர்ச்சிவசப்படாது இவனது மரணத்தை பற்றி ஆழமான விசாரணைகளை நடாத்தி இவனது மரணத்திற்கு வழி வகுத்தவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க முன்வர வேண்டும்.

தற்போது எம் முன்னால் நிற்கும் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் யாரும் உத்தமர்கள் அல்ல என்பதை எமது சமூகம் நுாறுக்கு நுாறுவீதம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எமக்கான சரியான தலைமைத்துவம் வரும்வரை நாம் யாரையும் பலி கொடுக்காது யாருடைய பொய் தேசியக் குமுறல்களையும் காதில் எடுக்காது இருப்பது மிக மிக அவசியமாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -