கட்டார் வாழ்,முஸ்லிம் காங்கிரசின் எனது உறவுகளுக்கு ! அஸ்ஸலாமு அலைக்கும்.
கட்டார் நாட்டிற்கு முதல் தடவையாக வருகை தந்துள்ள நான்,உங்களில் ஒரு சிலரை மாத்திரம் சந்திக்க கிடைத்தது.அல்ஹம்துலில்லாஹ்.உங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டுமென நான் பெரிதும் ஆசைப்பட்டபோதும், அது போல் உங்களில் பலர் விரும்பியபோதும், அது கடந்த 3 நாட்களுக்குள் சாத்தியப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எ.ஐ.மன்சூர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வருடக்கணக்காக உறவுகளைப் பிரிந்து இத்தேசத்தில் உழைத்துக்கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் சந்தித்து சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்ள,சாத்தியமான ஏற்பாடொண்றை எனது நண்பர்கள் சிலர் மேற்கொண்டுள்ளனர்.அதன்படி இன்ஷாஹ் அல்லாஹ், எதிர்வரும் வெள்ளிக்கிழமை(2015/11/13 ஆம் திகதியன்று),அஷர் தொழுகைக்கு,பர்வா விலேஜிலுள்ள மையவாடிப் பள்ளி வாசலில் உங்களை எதிர்பார்க்கிறேன்.
உங்களுக்கு சிரம ம் இல்லையென்றால் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எம்.ஐ.எம்.மன்சூர்.பா.உ,
திகாமடுள்ள மாவட்டம்.
