காத்தான்குடி ஆதார வைத்திய சாலைக்கு அவசரமாக உதவுங்கள்..!

ஏ.எல்.டீன்பைரூஸ்-
காத்தான்குடி ஆதார வைத்திய சாலையின் அத்திய,அவசிய தேவைகள் தொடர்பாக காத்தான்குடி மீடியா போரத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.எம்.ஜாபிர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அண்மையில் இடம் பெற்றது.
காத்தான்குடி ஆதார வைத்திய சாலைக்கான காத்தான்குடி மீடியா போரத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களின் விஜயத்தின் போது பல்வேறுபட்ட விடயங்களை நேரினில் பார்த்தும்,கேட்டறிந்தும் கொள்ளக் கூடியதாக இருந்தது.

காத்தான்குடி ஆதார வைத்திய சாலை தொடர்பில் அவசியமாகவும்,அவசரமாகவும் ஆராய்ந்து பரிகாரம் கான வேண்டிய பல விடயங்கள் இருக்கின்ற போதிலும் பிரதானமாக மூன்று விடயங்களை குறிப்பிடலாம்.

1. காத்தான்குடி ஆதார வைத்திய சாலை 480 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. 100 மில்லியன் ரூபாவுக்கான வைத்தியசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுpன்றது. ஆனால் இது தொடர்பான எந்த ஆவணமும் தற்போது வைத்திய சாலையில் இல்லை என்றே கூறுகின்றனர் அப்படியாயின் இதில் ஊழல் இடம் பெற்றுள்ளதா என ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டு;ள்ளது.

2. காத்தான்குடி ஆதார வைத்திய சாலை என்றதும் மாகாண மட்டத்தில் படு மோசமான நிர்வாக பயங்கரவாதம் மேற் கொள்ளப்பட்டு; வருவதாக அறிய முடிகின்றது. 

3. ஆதார வைத்தியசாலை என்ற தரத்திற்கு அதனை வளரவிடாது தடுக்கும் தரப்பினர் விடயத்தில் ஒட்டு மொத்த சமூகமும் மிகவும் விளிப்புடன் இருப்பதன் மூலமாகவே அதன் வெற்றி தங்கியுள்ளது.

நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்.

1. அன்பானவர்களே காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் புதிதாக அமைக்கப்படவுள்ள உளநலப்பிரிவு வாட்டின் நிர்மான பணிக்காக மேலும் சுமார் 5 இலட்சம் ரூபாய் பணம் உடனடியாக தேவைப்படுகின்றது அதற்காக தயவு செய்து உடன் உதவுங்கள்.

2. அவசரமாக 150 கட்டில் தேவைப்படுகின்றது (ஒரு கட்டிலின் பெறுமதி ரூபாய் 15000/=) பிலீஸ் தயவு செய்து உடன் உதவுங்கள்.

3. கட்டிலுக்கான 300 பெட்சீட் தேவைப்படுகின்றது தயவு செய்து உடன் உதவுங்கள்.

இதனை எவ்வாறு சாத்தியப்படுத்தலாம்.

1. இந்த செய்தியினை உங்கள் டுவிட்டர்,பேஸ்புக்,ஈமெயில்,இண்டநெட் மூலமாக எல்லோருக்கம் தெரியப்படுத்துங்கள்.

2. நீங்கள் ஒவ்வொருவரும் ஆகக்குறைந்தது 100ரூபாய் (அதற்கு மேல் உங்கள் விருப்பம்) வைத்தியசாலையின் வங்கி கணக்கிற்கு அனுப்பிவையுங்கள். 

3. வைத்திய அத்தியட்சகருடன் நீங்கள் தொடர்பு கொண்டு தனிப்பட்ட ரீதியாக உங்களால் முடிந்த உதவிகளை,ஆலோசனைகளையும் தெரிவியுங்கள்.

காத்தான்குடி ஆதார வைத்திய சாலையின் பௌதீக வளங்களை பெற்றுக் கொடுப்பதற்காக காத்தான்குடி மீடியா போரம் மேற் கொள்ளும் இந்த முயற்சியில் நீங்களும் பங்குதாரர்களாக இனையுங்கள் என அன்புடன் வேண்டுகின்றோம்.

நீங்கள் வழங்கப் போகும் ஒவ்வொரு ரூபாயும் சதகதுல் ஜாரியா என்பதனை மறவாதீர்கள். வைத்தியசாலை விடயத்தில் மீடியாபோரம் அவதானத்துடன் இருக்கும் என்பதுடன் மக்கள் பங்களிப்பை உங்கள் முன் வைப்போம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்பு. 
வைத்தியசாலை. 065 22 45561/ 065 20 55 333.
Kattankudy base hospital empolyees social welfare society.
Peoples bank kattankudy branch.
A/C. 065=1=001=20058631




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -