டிப்பர் வாகனம் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்டபோது விபத்து..!

பழுலுல்லாஹ் பர்ஹான்-
ட்டக்களப்பில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் இலங்கை போக்குவரத்து சபையின் களுவாஞ்சிக்குடி டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி விபத்து நேற்று (04) புதன்கிழமை நன்பகல் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை நாவற்குடா பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் டிப்பர் வாகனத்திற்கும் ,பஸ்ஸ_க்கும்,வீதிக்கும் தேசம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது.

டிப்பர் வாகனம் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு இவ் விபத்துக்கு காரணமாக இருந்த டிப்பர் வாகன சாரதியிடம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதியை சேதப்படுத்தியமைக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 12000 ரூபாவும், இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்ஸை சேதப்படுத்தியமைக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 ரூபாவும் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.துஷார ஜெயலால் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -