அஸ்மி ஏ கபூர்-
அதாஉல்லாஹ்வின் அபிவிருத்தியில் குறை காண்பவர் "தாருஸ்ஸலாம்"தை என்ன செய்து வைத்திருக்கிறார். .
போரளிகள் என்போர் தொடுக்க வேண்டிய இன்றைய வினா? 13வருட அரசியலின் மிகப்பாரிய அமைச்சுகளின் பொறுப்பாய் இருந்தவர் பிரதிக்கல்வியமைச்சிலிருந்து மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சு வரை பாரிய வேலைத்திட்டங்களையும் பாடசாலை, வைத்தியசாலைகள், பாதைகள், கிராமிய மின்சாரம், உட்பட அனைத்து உட்கட்டமைப்புகளையும் நாடு தழுவிய அளவில் சாதித்து கறைபடியாத கரங்களுடன் தனது அரசியலை மேற்கொள்ளும் தேசிய காங்கிரஸினுடைய தலைவர் அதாஉல்லாஹ்வின் அபிவிருத்தியில் குறை கண்டுபிடிக்க வெளியாகியிக்கும் கிழக்கு முதலமைச்சர் தொடர்பில் நாம் புன்னகைகதான் முடியும்
இப்போது முதன்முறையாக முஸ்லீம் அரசியலில் மக்கள் வாக்களிப்பின் மூலம் மாகாண சபைக்கு தெரிவானவர் பசீர் சேகு தாவூதின் எதிராளியாக உருவாக்கப்பட்டவர்
மு கா விட்டு பிரிந்து தனிக்கட்சி தொடங்கி அது வெறறியளிக்காத போது கட்சியையும் அதன் சின்னத்தையும் ஒரு தேர்தலில் பறி போவதற்க்கு காரணமாக இருந்தவர்
அந்த கெடுபிடியான சூழலை பற்றி செயலாளர் ஹசனலி அறியாமலில்லை அதனை அவர் அனுபவித்திருக்கிறார் தாருஸ்ஸலாம் மு.காங்கிரஸின் தலைவரால் கட்டப்பட்ட அந்த கட்சியின் சொத்து அதை வைத்து கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தியவர்கள் அதை காரணம் காட்டியே முஸ்லீம் காங்கிரஸ் இல் இணைந்தவர்கள் இன்று அதாஉல்லாஹ்வின் அமைச்சுகளால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பல நூறு கட்டடங்களில் ஒரு சிலவற்றுக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டால் ஏன் வைக்கிறார் என கேட்கிற நிலை வந்திருக்கிறது
முதலில் இன்று வரை கட்சியின் தலைமையக்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் முகா வினுடைய போரளிகள் கேள்விகளை தொடுத்தே ஆக வேண்டும் இது அவர்கள் மீது பொறுப்பான விடயமாகும்.
அதாஉல்லாஹ், ஹிஸ்புல்லா, அமிரலி போன்றோர் பல்வேறு செயற்திட்டங்களை அடிக்கல் நாட்டுவதிலிருந்து கட்டி முடித்துமிருக்கிறவர்கள் அவர்கள் தொடர்பில் இப்போதுதான் மலசல கூடங்களுக்கு கல்வைத்து கொண்டிருப்பவர்கள் பேச விளைவதா?தனது ஊரை சிங்கப்பூராக்கி காட்டுவதாககூறியவர் என்ன செய்திருக்கிறார்
அதாஉல்லாஹ் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர்களே வியந்து நிற்கும் போது பேசுவதற்கு ஏதுமில்லாத சில்லறை பேச்சுக்கள் மக்கள் மத்தியில் வெறுப்பை தோற்றுவித்திருக்கிறது
