காத்தான்குடியில் கடலில் குளிக்கச்சென்ற 15 வயது சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலை..!




பழுலுல்லாஹ் பர்ஹான்=

ட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நதியா கடற்கரை பிரதேசத்திலுள்ள கடலில் குளிக்கச்சென்ற 15 வயது சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.

இச் சம்பவம் இன்று சனிக்கிழமை மதியம் சுமார் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

எட்டு நண்பர்களுடன் இவர் இன்று காலை குறித்த கடலில் குளிப்பதற்காக சென்றுள்ளார் எனவும் இவர்களுள் 7 பேர் தப்பிவந்துள்ள நிலையில் ஒருவரை நீர் இழுத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரினால் இழுத்துச் செல்லப்பட்டவர் புதிய காத்தான்குடி-06 கர்பலா வீதியைச் சேர்ந்த 15 வயதுடைய அப்துல் அசீஸ் முஹம்மது சம்சாத் என தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -