மைத்திரியை 70வது பிறந்த நாள் நிகழ்வுக்கு அழைக்கின்றார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 70வது பிறந்த தின மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது

எதிர்வரும் 18ம் திகதி மஹிந்த ராஜபக்ச தனது 70ம் பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். பிறந்த நாளை முன்னிட்டு அனுராதபரத்தில் விசேட மத வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது. எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்படும் என மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் ருவான்வெலிசேயாவில் 84,000 விளக்குகள் ஏற்றி விசேட பூஜை ஒன்றை நடத்தியும், ஸ்ரீமஹா போதியில் விசேட போதி பூஜையொன்றும் அன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -