கூட்டு எதிர்க்கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய தரப்புக்களும் இணைந்து கூட்டு எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளது.
மக்களின் நலன் பேணும் எதிர்க்கட்சி என இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மக்கள் நலன் பேணும் எதிர்க்கட்சியின் தலைமப் பதவிக்கு தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதன் பிரதம அமைப்பாளராக டலஸ் அழப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் அழைப்பாளராக பிரசன்ன ரணதுங்கவும், நிதி மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்கு பொறுப்பாளராக மஹிந்தானந்த அலுத்கமகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பாராளுமன்றில் இயங்கி வரும் எதிர்க்கட்சி, அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சியாகும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.வெளிநாடுகளைப் போன்ற இலங்கையிலும் நிழல் அமைச்சரவை ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு அமைச்சில் இடம்பெற்றும் ஊழல் மோசடிகள் தவறுகளை சுட்டிக்காட்டவும் அதனை அம்பலப்படுத்தவும் நிழல் அமைச்சரவை உருவாக்கப்பட உள்ளது.
