அக்கரைப்பற்று மைதான அபிவிருத்திக்கு முதற்கட்டமாக 5 இலட்சம் ஒதுக்கீடு - சுகாதார அமைச்சர் நஸீர்


ஊடகப் பிரிவு -
க்கரைப்பற்று அஸ் சிறாஜ் மகா வித்தியாலய மைதான அபிவிருத்திக்கு முதற்கட்டமாக ரூபா 5 இலட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று செவ்வாய்கிழமை (10) தெரிவித்தார்.

அக்கரைப்பற்று அஸ் சிறாஜ் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய, மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் சாதனை படைத்த சாதணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வுக்கு கலந்துகொண்டபோது அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும், பாடசாலை மைதான அவல நிலைமை பற்றிய குறைபாடுகளை பாடசாலை குழாமினர் எடுத்துரைத்ததையடுத்து அன்றைய தினம் அம்மைதானத்தை பார்வையிட்ட பின்னரே இந்நிதியினை வழங்குவதாக அப்பாடசாலையின் அதிபர் குழாமினரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைவாகவே அஸ் சிறாஜ் மகா வித்தியாலய மைதான அபிவிருத்திக்கு ரூபா 5 இலட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட பாடசாலையின் மைதானம் சாதாரண மழை பெய்தாலும்கூட நீரில் மூழ்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -