எப்.முபாரக்-
பொது இடத்தில் மதுபானம் அருந்திய ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதனைத் செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று மாதம் சிறைதண்டனை விதித்து கந்தளாய் நீதிமன்றம் திங்கட்கிழமை(9)உத்தரவிட்டுள்ளது.
கந்தளாய் வான்எல பகுதியைச் சேர்ந்த சாந்த குமார வயது(49) என்பவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கந்தளாய் நகரின் பொது இடமொன்றில் பகள் வேளையில் மதுபானம் குடித்துக்கொண்டிருந்த வேளை கந்தளாய் கைது கந்தளாய் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்ததிய போதே அத்தீர்ப்பினை கந்தளாய் நீதிமன்ற நீதிபதி ருவன் திஸாநாயக்க தீர்ப்பளித்தார்.
